உலகில் முதல் முறை: சிறுவன் மூளையில் பொருத்தப்பட்ட வலிப்பு நோய் கட்டுப்பாட்டுக் கருவி!

வலிப்பு நோய் பாதித்த சிறுவனின் மூளையில் நோய் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டு சோதனை
சிறுவன் ஓரன் - டிடி நியூஸ்
சிறுவன் ஓரன் - டிடி நியூஸ்
Updated on
2 min read

உலகிலேயே முதல் முறையாக பிரிட்டனைச் சேர்ந்த சிறுவனுக்கு, வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தும் கருவி, அவரது மூளையில் பொருத்தபப்ட்டுள்ளது.

ஓரன் நால்சன் என்ற சிறுவனுக்கு வலிப்பு நோயின் பாதிப்பு கடுமையாக இருந்த நிலையில், ஒரு நாளில் நூற்றுக்கணக்கான முறை வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டுவந்தார். அவரது மூளையில் பொருத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டுக் கருவி, மூளைக்கு எலக்ட்ரிக்கல் சமிக்ஞைகளைக் கொடுத்து ஒரு நாளில் ஏற்படும் வலிப்பு எண்ணிக்கையை 80 சதவீதம் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறுவனின் மூளையில் இந்தக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்ட பிறகு அவன் இயல்பாக இருப்பதாகவும், முன்பை விட சுட்டியாக மகிழ்ச்சியாக இருப்பதாக அவரது தாய் தெரிவித்துள்ளார். குதிரை ஏற்றம், விளையாட்டு என அவனது வாழ்க்கை மாறியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

சிறுவன் ஓரன் - டிடி நியூஸ்
நீட் தேர்வு முறைகேட்டில் அடுத்த ரகசியம்? எம்பிபிஎஸ் மாணவர்கள் விவரம் சேகரிப்பு!

ஓரன், சேமர்செட் பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவன். லண்டன் கல்லூரி பல்கலை, கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை ஆகியவற்றின் கூட்டணியில் கடந்த அக்டோபரில் இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிறுவனுக்கு 3 வயதிலிருந்தே வலிப்பு நோய் இருந்துள்ளது. இது அவன் வளர வளர தீவிரமடைந்துள்ளது.

இந்த அறுவைசிகிச்சைக்கு முன், சிறுவனுக்கு ஒரு நாள் கூட வலிப்பு ஏற்படாமல் இருந்ததில்லை என்றும் ஒரு சில நாள்களில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை வலிப்பு ஏற்படும் என்றும் சில வேளைகளில் அவன் நினைவிழந்து மூச்சு விடுவது நின்றும் கூட போயிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், அவன் தீவிர வலிப்பினால் எப்போது வேண்டுமானாலும் மரணத்தைத் தழுவலாம் என்ற நிலையில், குடும்பத்தினரால் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருந்த நிலையில்தான் இந்த அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

3.5 செ.மீ. சதுரத்தில் 0.6 செ.மீ. தடிமன் கொண்ட கட்டுப்பாட்டுக் கருவி, ஓரனின் மண்டை ஓடு அதற்கேற்ப வெட்டி எடுக்கப்பட்டு அதற்குள் வைத்து மண்டை ஓட்டுடன் ஸ்குரூ போட்டு இணைக்கப்பட்டுள்ளது. தலையில் மாட்டும் ஹெட்போன் போன்ற கருவி மூலம், இந்த கட்டுப்பாட்டுக் கருவிக்கு சார்ஜ் போடப்படுகிறது.

சிறுவன் ஓரன் - டிடி நியூஸ்
ம.பி.யில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை

அறுவை சிகிச்சையிலிருந்து சிறுவன் உடல்நலம் தேறிய பிறகே, இந்த கருவி இயக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம், சிறுவனின் மூளைக்கு மிக லேசான எலக்ட்ரிக்கல் தூண்டுதல் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும், இதனால், வலிப்பு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதனால், சிறுவன் தற்போது நல்ல உடல்நலத்துடன் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com