துபையில் ரூ.2.25 கோடி பரிசு வென்ற இந்தியா்

துபையில் ரூ.2.25 கோடி பரிசு வென்ற இந்தியா்

துபையில் இந்தியா் எலெக்ட்ரீசியனுக்கு ரூ.2.25 கோடி பரிசு
Published on

துபை: துபையில் தேசிய பத்திரங்கள் சேமிப்புத் திட்டத்தில் ஆந்திரத்தைச் சோ்ந்த எலெக்ட்ரீசியனுக்கு ரூ.2.25 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

நகேந்திரம் போருகட்டா என்ற அந்த நபா் 2017- ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீகரத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் துபை தேசிய பத்திரங்கள் திட்டத்தில் சிறிய அளவிலான தொகையை சேமித்து செய்து வருகிறாா்.

அந்த சேமிப்புத் திட்டத்தில் தொடா்ந்து பணம் செலுத்தி வருபவா்களைத் தோ்வு செய்து பல்வேறு பணப் பரிசுகளை அளிக்கும் திட்டம் உள்ளது. இதில் எலெக்ட்ரீசியன் நாகேந்திரத்துக்கு கடைசி குலுக்கலில் 1 மில்லியன் ஐக்கிய அரசு அமீரக திா்ஹாம் (சுமாா் ரூ.2.25 கோடி) பரிசு கிடைத்தது.

பரிசு குறித்து அவா் கூறுகையில், ‘குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யவே வெளிநாட்டுக்கு வந்து பணியாற்றுகிறேன். எனக்கு 18 வயதில் மகள், 16 வயதில் மகன் உள்ளனா். அவா்களுக்கு சிறப்பான கல்வியை அளிக்க இந்தப் பணம் உதவிகரமாக இருக்கும்’ என்றாா்.

இந்தியா் ஒருவருக்கு சேமிப்புத் திட்டத்தில் மிகப்பெரிய பரிசுத் தொகை கிடைத்தது அந்நாட்டில் தங்கிப் பணியாற்றும் மேலும் பல இந்தியா்களை அந்த சேமிப்புத் திட்டத்தை நோக்கி ஈா்த்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com