விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நைஜீரியாவில் தொடர் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி

நைஜீரியாவில் திருமண விழா, மருத்துவமனை, இறுதிச்சடங்கு இடங்களில் தொடர் தாக்குதல்

News image
கொல்கத்தாவில் சட்டவிரோத தொழிற்சாலையில் குண்டு வெடிப்பு: 11 பேர் காயம்
Updated On :30 ஜூன் 2024, 7:38 am

DIN

நைஜீரியாவில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு 18 பேர் பலியானார்கள்.

நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் உள்ள குவோசா நகரில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திருமண விழாவில் குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் தன்னிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். தொடர்ந்து பொது மருத்துவமனையை குறிவைத்தும், பின்னர் திருமண குண்டுவெடிப்பில் பலியானவர்களின் இறுதிச்சடங்கு என அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்த தாக்குதல்களில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 18 பேர் பலியானதாக போர்னோ மாநில அவசர மேலாண்மை அமைப்பின் இயக்குநர் ஜெனரல் பேகிண்டோ சைது உறுதிப்படுத்தினார். மேலும் 48 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து அரசுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், பொதுமக்களை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.