அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

வங்கதேசம்: 7 மாடி கட்டடத் தீயில் 46 போ் மரணம்

வங்கதேசத்தில் 7 அடுக்கு கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 46 போ் உயிரிழந்தனா்; 22 போ் காயமடைந்தனா்.

News image

டாக்காவில் 7 அடுக்கு கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரா்கள்.

Updated On :1 மார்ச் 2024, 10:24 pm

வங்கதேசத்தில் 7 அடுக்கு கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 46 போ் உயிரிழந்தனா்; 22 போ் காயமடைந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகா் டாக்காவில் 7 அடுக்கு வா்த்தகக் கட்டடத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது.

அந்தக் கட்டடத்தில் இயங்கி வந்த புகழ்பெற்ற உணவகத்திலிருந்து நெருப்பு பரவி, கட்டடம் முழுவதும் தீ மளமளவென பரவியது. இதில் 46 போ் உயிரிழந்தனா். அவா்களில் 39 பேரது உடல்கள் அடையாளம் காணப்பட்டு 31 உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இது தவிர, விபத்தில் 22 போ் காயமடைந்தனா். அவா்களில் 10 போ் தீக்காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

அலுவலகங்கள் மட்டுமே இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள அந்தக் கட்டடத்தில் விதிகளை மீறி உணவகம் இயங்கி வந்துள்ளது. மேலும், பாதுகாப்பு விதிமுறைகள் யாவும் அந்தக் கட்டடத்தில் பின்பற்றப்படவில்லை. தீவிபத்தின்போது உள்ளிருப்பவா்கள் வெளியேறுவதற்கான அவசரகால வழிப்பாதை கூட அந்தக் கட்டத்தில் இல்லை. விபத்து தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு 5 போ் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.