ஹிஜாப் விவகாரத்துக்குப் பின் ஈரான் எதிர்கொள்ளும் முதல் தேர்தல்!

போராட்டங்கள் நிறைந்த பின்னணியில் ஈரான் நாடாளுமன்ற தேர்தல்!
வாக்குப் பதிவு செய்யும் ஈரானிய பெண்
வாக்குப் பதிவு செய்யும் ஈரானிய பெண்AP

2022 புரட்சிக்கு பிறகு ஈரான் எதிர்கொள்ளும் முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.

ஈரானிய அரசு, ஹிஜாப் அணிவதைக் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. 22 வயதான மஹ்சா அம்னி சிறையில் இறந்ததார்.

ஈரானிய அரசின் இறையாட்சியை மாற்ற குரல் கொடுக்கும் யாருக்கும் தேர்தலில் நிற்க அனுமதியளிக்கப்படவில்லை. தேர்தலில் நிற்பவர்களில் பெரும்பாலானவர்கள் பழமைவாதிகள் மற்றும் கடினபோக்காளர்கள் மட்டுமே.

ஈரான் பொருளாதாரம் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ஈரானிய ராணுவ வீரர்கள் மத்திய கிழக்கு மற்றும் ரஷியாவில் பங்கேற்றதால் மேற்குலக நாடுகளின் மானிய இழப்புக்கு ஈரான் ஆளானது.

வாக்குப் பதிவு செய்யும் ஈரானிய மக்கள்
வாக்குப் பதிவு செய்யும் ஈரானிய மக்கள்AP

290 தொகுதிகள் கொண்ட பாராளுமன்றத்துக்கு 15 ஆயிரத்துக்கு அதிகமான பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் 116 பேர் மட்டுமே மிதமான அல்லது தீவிர மாற்றத்துக்கான ஆதரவாளர்கள்.

இவர்களுக்கு 4 ஆண்டு ஆட்சிக் காலம். 5 தொகுதிகள் மட்டும் ஈரானின் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தீவிர போக்காளர்களே 20 ஆண்டுகளாக ஈரானில் ஆட்சி நடத்தி வருகின்றனர். அமெரிக்காவுக்கு வீழ்ச்சி என்கிற முழக்கம் தொடர்ந்து வருகிறது.

8.5 கோடி பேர் மக்கள்தொகை கொண்ட ஈரானில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் 6.1 கோடி பேர்.

59 ஆயிரம் வாக்கு மையங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்த கூடுதலாக 10 லட்சம் பேர் வேலை செய்கின்றனர்.

மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களா என்பதே தற்போதைய கேள்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com