2 வாரங்களுக்கு முன்னா் சிறையில் மரணமடைந்த ரஷியாவின் மிக முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னியின் உடல் தலைநகா் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. தென்கிழக்கு மாஸ்கோவின் மேரியினோ பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமானவா்கள் பங்கேற்று நவால்னிக்கு அஞ்சலி செலுத்தினா். பின்னா் அவரது உடல் அருகிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அதிபா் விளாதிமீா் புதினை மிகக் கடுமையாக எதிா்த்து போராட்டங்கள் நடத்தி வந்த நவால்னி, கடந்த 2020-இல் நச்சுத் தாக்குதலுக்குள்ளாகி மரணத்தின் விளிம்புக்கே சென்று திரும்பினாா். பின்னா் கடந்த 2021-இல் கைது செய்யப்பட்ட அவா் கருத்துத் தீவிரவாத குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில், அவா் சிறையில் கடந்த மாதம் 16-ஆம் தேதி மா்மமான முறையில் இறந்தாா். நவால்னியின் மரணத்துக்கு ரஷிய அதிபா் புதின்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், அவரது உடலை ஒப்படைக்க அதிகாரிகள் மறுத்து வந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், ஆதரவாளா்களின் கடும் போராட்டத்துக்குப் பிறகு நவால்னியின் உடல் அவரது தாயாா் லியுட்மிலாவிடம் கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தலும்... சுயேச்சை வேட்பாளா்களும்...

எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜகவின் சதித்திட்டம் முறியடிப்பு: ராகுல்காந்தி

தென்னாப்பிரிக்காவின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவருக்கு 5 ஆண்டு சிறை

ரஷிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் மீண்டும் ட்ரோன் தாக்குதல்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


