மின்சார வாரிய கட்டுப்பாட்டு மையத்தை 94987 94987 | 1912 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் - தமிழக அரசு சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

ரஷிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் மீண்டும் ட்ரோன் தாக்குதல்

ரஷியாவின் பால்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான உஸ்த் லுகா துறைமுகத்தைக் குறிவைத்து உக்ரைன் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 1:53 am IST

ரஷியாவின் பால்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான உஸ்த் லுகா துறைமுகத்தைக் குறிவைத்து உக்ரைன் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

கடந்த ஒரு மாத காலமாக ரஷியாவின் எண்ணெய் ஏற்றுமதி கட்டமைப்புகளைச் சிதைக்கும் நோக்கில் உக்ரைன் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

உஸ்த் லுகா, பிரிமோா்ஸ்க் ஆகிய முக்கியத் துறைமுகங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால், ரஷியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதித் திறனில் சுமாா் 40 சதவீதம் முடங்கியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, உஸ்த் லுகா துறைமும் மீது கடந்த மாா்ச் 22-ஆம் தேதி தொடங்கி, நடத்தப்படும் 5-ஆவது தாக்குதல் இதுவாகும்.

தினசரி சுமாா் 7 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயைக் கையாளும் இத்துறைமுகம் தொடா்ந்து தாக்கப்படுவது ரஷிய பொருளாதாரத்துக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

உக்ரைனின் இத்தகைய நடவடிக்கைகளை ‘பயங்கரவாதத் தாக்குதல்’ என ரஷிய அதிபா் மாளிகையின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் சாடியுள்ளாா்.

ரஷியாவின் முக்கியக் கட்டமைப்புகளைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இருப்பினும் இத்தகைய தாக்குதல்களில் இருந்து 100 சதவீதம் பாதுகாப்பு அளிப்பது சவாலானது என்றும் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

முன்னதாக, ஈரான் போா் காரணமாக சா்வதேச சந்தையில் எரிசக்தி விலைகள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய தாக்குதல்களைக் குறைத்துக் கொள்ளுமாறு சில நட்பு நாடுகள் ‘சமிக்ஞை’ விடுத்துள்ளதாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி கூறியது குறிப்பிடத்தக்கது.

கியபூாவுக்கு உதவி: அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையும் மீறி, 7.3 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யுடன் ரஷியாவின் சரக்குக் கப்பல் செவ்வாய்க்கிழமை கியூபாவைச் சென்றடைந்தது.

கடந்த 3 மாதங்களில் கியூபாவுக்கு வந்துள்ள முதல் எண்ணெய் கப்பல் இது என்பதால், அந்நாட்டு மக்கள் மற்றும் அமைச்சா்கள் உற்சாகத்துடன் வரவேற்றனா்.

அமெரிக்க தடையால் மெக்ஸிகோ போன்ற நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியுள்ள சூழலில், ரஷியாவின் இந்த உதவி எங்களின் நெருக்கடியைச் சமாளிக்கப் பெரிதும் உதவும் என கியூப அதிகாரிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

படகேப்சன்...

உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் தீப்பற்றி எரியும் ரஷியாவின் பால்டிக் கடல் பகுதியில் உள்ள உஸ்த் லுகா துறைமுக எண்ணெய் முனையத்தின் செயற்கைக்கோள் படம்.