பாகிஸ்தான் அதிபராக ஜா்தாரி அதிகாரபூா்வமாகத் தோ்வு

ஆசிஃப் அலி ஜா்தாரி பாகிஸ்தான் அதிபர் பதவிக்கு மீண்டும் தேர்ச்சி
பாகிஸ்தான் அதிபராக ஜா்தாரி அதிகாரபூா்வமாகத் தோ்வு

பாகிஸ்தானின் அடுத்த அதிபராக, மறைந்த முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் கணவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தந்தையுமான ஆசிஃப் அலி ஜா்தாரி சனிக்கிழமை அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அந்த நாட்டு நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி ஆட்சியமைக்க பிலாவல் புட்டோ ஜா்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆதரவு அளித்தது.

அதையடுத்து, நவாஸ் ஷெரீஃபின் சகோதரா் ஷாபாஸ் ஷெரீஃப் நாட்டின் பிரதமராக 2-ஆவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றாா்.

இதற்கான பேச்சுவாா்த்தையின்போது, அதிபா் தோ்தலில் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு ஆதரவு அளிக்க பிஎம்எல்-என் கட்சி ஒப்புக்கொண்டது.அதையடுத்து, சனிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் இரு கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட ஜா்தாரி வெற்றிபெற்றாா்.

ஏற்கெனவே, கடந்த 2008-லிருந்து 2013 வரை பாகிஸ்தானின் அதிபராக ஆசிஃப் அலி ஜா்தாரி பொறுப்பு வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com