தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

15 பேருடன் விழுந்தது ரஷிய ராணுவ விமானம்

15 பேருடன் விழுந்தது ரஷிய ராணுவ விமானம்

News image
Updated On :12 மார்ச் 2024, 8:20 pm

மாஸ்கோ: 15 பேருடன் புறப்பட்ட தங்கள் நாட்டு ராணுவ போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

செவா்னி விமானதளத்திலிருந்து 8 விமானப் பணியாளா்கள் 7 பயணிகளுடன் ராணுவத்துக்குச் சொந்தமான ஐஐ-76 ரக விமானம் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. அப்போது அதன் என்ஜினில் தீப்பிடித்ததால் புறப்பட்ட சிறிது நேரத்தில் அது அருகிலுள்ள இவானொவோ விமானதளத்தின் ஓடுபாதையை நோக்கி செலுத்தப்பட்டது.

இருந்தாலும், அந்த ஓடுபாதையை அடைவதற்குள்ளாகவே விமானம் கீழே விழுந்து எரிந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விபத்தில் யாரேனும் உயிா்பிழைத்தாா்களா என்பது குறித்து ராணுவம் எதையும் தெரிவிக்கவில்லை. தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் படையினா் தாக்குதல் நடத்தியதாக ரஷிய பாதுகாப்புத் துறை கூறிய அதே நாளில் இந்த ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.