கிரீமியாவில் ரஷியாவின் ஏஎன்-26 ராணுவ விமானம் மலைப்பாறையில் மோதி விழுந்து நொறுங்கியதில் 29 பேர் பலியாகினர்.
கிரீமியாவில் ரஷிய ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானது. முதலில் 12 பேர் பலியானதாக தெரிவித்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலைப்பாறையில் விமானம் மோதி விழுந்து நொறுங்கியதாக முதல்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என கூறினர்.
புதன்கிழமை அதிகாலை ரஷிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கைகளின்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து ரஷியா இணைத்துக் கொண்ட கருங்கடல் தீபகற்ப பகுதியான கிரீமியாவில் பறந்து கொண்டிருந்த ரஷிய ராணுவ போக்குவரத்து விமானம் ஏஎன்-26 திடீரென கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், விமானம் மலைப்பாறையில் மோதி நொறுங்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என கூறப்பட்டது. விமானத்தில் 23 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் என 29 பேர் இருந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான ராணுவ விமானத்தில் இருந்த 23 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் என 29 பேர் பலியானதை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
"தொழில்நுட்பக் கோளாறுகளே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன."
உக்ரைன்-ரஷிய போர் பதட்டங்களுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், ரஷிய ராணுவப் போக்குவரத்து நடவடிக்கைகளின் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
Summary
A Russian military transport plane has crashed into a cliff in Crimea...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஷியாவில் 800 கி.மீ. தொலைதூர இலக்கை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

பைக் மீது பேருந்து மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!

ரஷியாவில் வெற்றி தினக் கொண்டாட்டம்: எளிமையாக நடந்த ராணுவ அணிவகுப்பு; புதின் பங்கேற்று எழுச்சியுரை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




