வெடித்துச் சிதறிய ஜப்பான் ராக்கெட்! (விடியோ)

விண்ணுக்கு செலுத்தப்பட்ட ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட் இது.
குஷிமோடோ ஏவுதளத்தில் வெடித்துச் சிதறிய ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட்.
குஷிமோடோ ஏவுதளத்தில் வெடித்துச் சிதறிய ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட்.

ஜப்பானில் தனியார் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்ட ராக்கெட் கவுன்டவுன் முடிந்து விண்ணுக்கு ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்துச் சிதறியது.

ஜப்பான் சார்பில் விண்ணுக்கு செலுத்தப்பட்ட முதல் தனியார் ராக்கெட் இதுவாகும்.

மேற்கு ஜப்பானின் வகாயாமா பகுதியின் குஷிமோடோ ஏவுதளத்திலிருந்து ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் நிறுவனத்தின் ராக்கெட் இன்று (மார்ச் 13) விண்ணில் ஏவப்பட்டது. பெரும் புகையுடன் விண்ணை நோக்கி கிளம்பிய ராக்கெட் புறப்பட்ட சில நொடிகளில் வெடித்துச் சிதறியது.

ஸ்பேஸ் ஒன் என்பது டோக்கியோவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமாகும். 2018-ல் உருவான இந்த நிறுவனம் சார்பில் விண்ணுக்கு சொந்தமாக ராக்கெட் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி கைரோஸ் வகையைச் சேர்ந்த 60 அடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கினர். இதில் தனியார் செயற்கைக்கோளுடன் அரசு சார்பில் சிறிய செயற்கைக்கோளும் உடன் அனுப்பப்பட்டது.

ஸ்பேஸ் ஒன் நிறுவனத்துக்குச் சொந்தமான குஷிமோடோ ஏவுதளத்திலிருந்து இன்று கவுன்டவுன் முடிந்ததும் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. எனினும் விண்ணில் பறக்கத்தொடங்கிய சில நொடிகளில் ராக்கெட் வெடித்துச் சிதறியது.

முதல் கைரோஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. எனினும் வெடித்துச் சிதறியதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும் என ஸ்பேன் ஒன் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஜப்பானில் கடந்த ஜுலை மாதம் ராக்கெட் எஞ்சின் சோதனையின்போது 50 விநாடிகளில் வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com