சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கடந்த 24 மணி நேரத்தில் 69 பேர் பலி! காஸாவில் தொடரும் துயர்!!

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு, மக்கள் நிலை அவலம்

News image
வடக்கு காஸாவில் குண்டுவீச்சினால் எழும் புகை (கோப்புப் படம்)- AP
Updated On :14 மார்ச் 2024, 1:03 pm

DIN

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 69 பாலஸ்தீனர்கள் பலியாகினர். 110 பேர் காயமுற்றனர்.

ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 31,341 ஆகவும் காயமுற்றவர்கள் எண்ணிக்கை 73,134 ஆகவும் உயர்ந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

கடும் குண்டுவீச்சு மற்றும் போதுமான மீட்பு மற்றும் மருத்துவ சிகிச்சை இல்லாததால் கட்டட இடிபாடுகள் நடுவே சிக்கிக் கொண்டிருப்பவர்கள் நிலை மோசமாக உள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் தெற்கு நோக்கி தனது போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ள நிலையில் அங்கு தஞ்சம் புகுந்துள்ள லட்சக்கணக்கான மக்களை மீண்டும் இடம்பெயர இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.