மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இஸ்ரேலில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்: பலன் தருமா பேச்சுவார்த்தை?

ஆன்டனி பிளிங்கனின் இஸ்ரேல் பயணம்: அமெரிக்கா-இஸ்ரேல் உறவில் புதிய திருப்பம்?

News image
இஸ்ரேலில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்- Evelyn Hockstein
Updated On :22 மார்ச் 2024, 9:59 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் சென்றுள்ளார்.

காஸாவின் தெற்குப் பகுதியான ராபா நோக்கி தனது போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் முடிவில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள அமெரிக்கா அதற்கான மாற்று வழிகளை முன்வைக்கவுள்ளது.

போர் தொடங்கியது முதல் ஆறாவது முறையாக இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ள ஆன்டனி பிளிங்கன், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து உரையாடவுள்ளார்.

முன்னதாக மத்திய கிழக்கு நாடுகளின் வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் உரையாடிய பிளிங்கன், “ராபாவில் இஸ்ரேல் மிகப்பெரும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது தவறானது, நாங்கள் அதற்கு ஆதரவு அளிக்க போவதில்லை. ஹமாஸுடன் போர் புரிய இந்த நடவடிக்கை அவசியமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

ராபாவில் ஹமாஸை எதிர்கொள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து பிளிங்கன் பேசவுள்ளார். இதன் தொடர்ச்சியாக அடுத்த வாரம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் வாஷிங்க்டன் செல்லவுள்ளனர்.

நெருங்கிய நட்பு நாடுகளான அமெரிக்கா- இஸ்ரேல் இடையேயான உறவில் கருத்து வேறுபாடுகளால் விரிசல் ஏற்பட்டு வருகிற சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் விடுதலை குறித்த அமெரிக்கா விடுத்துள்ள ஐநா தீர்மானம் வெள்ளிக்கிழமை வாக்கெடுப்புக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.