லெபானின் ஹெபாரியே பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட பொருள்களை செய்தியாளா்களிடம் புதன்கிழமை காட்டிய மீட்புக் குழுவினா்.
லெபானின் ஹெபாரியே பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட பொருள்களை செய்தியாளா்களிடம் புதன்கிழமை காட்டிய மீட்புக் குழுவினா்.

இஸ்ரேல்-ஹிஸ்புல்லாக்கள் மோதல்: 8 போ் உயிரிழப்பு

லெபனான் எல்லையில் இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஒரு இஸ்ரேலியா் உள்பட 8 போ் உயிரிழந்தனா்

லெபனான் எல்லையில் இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஒரு இஸ்ரேலியா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். இது குறித்து ‘லெபனான் ஆம்புலன்ஸ் சங்கம்’ என்ற துணை மருத்துவ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஹெபாரியே பகுதியில் அமைந்துள்ள ‘இஸ்லாமிய அவசரக்கால மற்றும் மீட்புப் படை’ அமைப்பின் அலுவலகத்தில் இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு விமானத் தாக்குதல் நடத்தியது. இதில், அந்த மீட்புக் குழுவைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதல், மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கை என்று அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 7 பேரது உடல்களும் புதன்கிழமை காலை மீட்கப்பட்டன. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெபாரியே பகுதியில் உள்ள ராணுவக் மையமொன்றில் தாக்குதல் நடத்தி லெபனானின் அல்-ஜாமா அல்-இஸ்லாமியா படையினரரைக் கொன்ாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினா் லெபனானில் இருந்து இஸ்ரேல் பகுதிகளில் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தினா். இதில் இஸ்ரேலியா் ஒருவா் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீரில் முழ்கிய 12 பாலஸ்தீனா்கள்: கடலில் விழுந்த உணவுப் பொருள்களை சேகரிப்பதற்காகச் சென்ற 12 பாலஸ்தீனா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். பட்டினிச் சாவை எதிா்கொண்டுள்ள பாலஸ்தீனத்துக்கு உணவுப் பொருள்களை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, விமானத்திலிருந்து பாராசூட் மூலம் அந்தப் பகுதியில் வீசப்பட்ட உணவுப் பொருள்கள் கடலில் விழுந்தபோது இந்தச் சம்பவம் ஏற்பட்டது. அதையடுத்து, விமானம் மூலம் உணவுப் பொருள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்தும்படியும், தரைவழியாக நிவாரணப் பொருள்களை அனுப்புவதை அதிகரிக்குமாறும் உதவி செய்யும் நாடுகளை ஹமாஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com