இஸ்ரேல் பிணைக்கைதிகளில் ஒருவர் பலி: யார் காரணம்?

ஹமாஸ் பிணையில் இஸ்ரேலியர் மரணம்: கைதிகள் விடுவிப்பு எப்போது?
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் AP

பயங்கரவாத இயக்கமான ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளில் ஒருவர் உயிரிழந்ததாக செவ்வாய்கிழமை பிணைக்கைதிகளுக்காக வாதிடும் குழு தெரிவித்தது.

இஸ்ரேல் அதிகாரிகளுக்கு எப்படி இந்த தகவல் கிடைத்தது என்பது குறித்த விளக்கமில்லை. 35 வயதான யூரியல் பாரூச் என்பவர் பலியாகியுள்ளார்.

சாலை மறியலில் ஈடுபடும் போராட்டக்காரர்கள்
சாலை மறியலில் ஈடுபடும் போராட்டக்காரர்கள்AP

அக்.7-ம் தேதி இஸ்ரேலின் நோவா இசை நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற யூரியல், ஹமாஸால் கடத்தி செல்லப்பட்டார்.

அதே நாளில் ஏறத்தாழ 250 பேரை இஸ்ரேல் கைதிகளாக கடத்தி சென்றது. அவர்களில் 120 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களில் 35 பேர் இறந்திருக்கலாம் என இஸ்ரேல் தெரிவிக்கிறது.

கூண்டுக்குள் அடைந்து போராடுபவர்கள்
கூண்டுக்குள் அடைந்து போராடுபவர்கள்AP

இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்த மற்றும் கைதிகள் விடுவிப்புக்கான பேச்சுவார்த்தை இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில் பிணைக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் பகுதியில் உள்ள ராணுவ கட்டுப்பாட்டகத்துக்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரிய கூண்டுக்குள் தங்களை அடைத்து கொண்டு மாதிரி போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com