ராஃபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

ராஃபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகளின் கட்டுப்பாடு
எகிப்து -ராஃபா எல்லையைப் பிரிக்கும் சுவர் அருகில் ராணுவத்தின் தாக்குதலால் புகை மேலெழும் காட்சி
எகிப்து -ராஃபா எல்லையைப் பிரிக்கும் சுவர் அருகில் ராணுவத்தின் தாக்குதலால் புகை மேலெழும் காட்சிஏபி

எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியான ராஃபாவின் காஸா பகுதியை இஸ்ரேல் டாங்கி படை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர கைதிகள் விடுதலைக்கான உடன்படிக்கை இன்னும் நிறைவேறாத நிலையில், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை விரிவுப்படுத்தியது பிரச்னையை இன்னும் சிக்கலாக்கும் எனக் கருதப்படுகிறது.

ராபாவின் கிழக்குப் பகுதியில் புகை மேலெழும் காட்சி
ராபாவின் கிழக்குப் பகுதியில் புகை மேலெழும் காட்சிஏபி

எகிப்து மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் மேற்கொண்டுவரும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேல், இந்த உடன்படிக்கையானது தங்களின் கோரிக்கைகளை நிறைவு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளது.

7 மாதங்களாக போர் தொடர்ந்துவரும் நிலையில் புதிய பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் போர் நிறுத்தம், சிறு ஆறுதலை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலிய ராணுவத்தின் டாங்கிகள் 401-வது படைப் பிரிவு ராபா எல்லையில் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாக செவ்வாய்க்கிழமை காலை ராணுவம் தெரிவித்துள்ளது.

நிவாரண பொருள்கள் பிராந்தியத்திற்குள் நுழைவதற்கும் காஸாவிலிருந்து எகிப்துக்குள் மக்கள் நுழைவதற்குமான வழியாக ராஃபா விளங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com