தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அல்-ஜசீரா அலுவலகங்களில் திடீர் சோதனை!

இஸ்ரேல் போலீஸாரின் திடீர் சோதனை: அல்-ஜசீரா அலுவலகம் குறிவைப்பு

News image

கத்தாரில் உள்ள அல்-ஜசீரா தலைமை அலுவலகம்

AFP

Updated On :9 மே 2024, 12:21 pm

DIN

நாசரேத் நகரத்தில் உள்ள அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் இஸ்ரேல் போலீஸார் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டதுடன் அல்-ஜசீராவுக்குச் சொந்தமான கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.

கத்தாரை மையமாகக் கொண்ட அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தின் இஸ்ரேல் அலுவலகங்களை மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த சில நாள்களுக்குப் பிறகு இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

இஸ்ரேல், அல்-ஜசீரா சேனலின் ஒளிபரப்பையும் முடக்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் தொழில்நுட்ப துறை அமைச்சர் இதற்கான ஆணையில் கையெழுத்திட்டார். அதே நாளில் கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-ஜசீரா அலுவலகத்தில் இஸ்ரேல் அரசு சோதனை நடத்தியது.

காஸா போர் தொடர்புடைய நிகழ்வுகளை செய்தியாக்குவதில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அல்-ஜசீரா மீது குற்றம் சுமத்தினார்.

இதனை மறுத்துள்ள அல்-ஜசீரா, இந்த தடை சட்டத்திற்கு புறம்பானது எனவும் மனித உரிமைகள் மற்றும் தகவல் பெறும் அடிப்படை உரிமையை மீறும் செயல் எனவும் தெரிவித்தது.

அல்-ஜசீரா தனது பணியாளர்கள் மற்றும் செய்தி நிறுவனத்தின் உரிமையைக் காக்க இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிராக இயன்ற நடவடிக்கையை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.