லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!
லெபனானில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு


தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் மூவர் உயிரிழந்ததாக லெபனானிய அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லெபனானில் செயல்பட்டுவரும் ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லா பயங்கவாதிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் நாள்தோறும் மோதல் வெடித்து வருகிறது.
எட்டாவது மாதமாக தொடரும் இந்த போரில் ஹமாஸுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களால் இஸ்ரேல் தனது தாக்குதலை எல்லைப்பகுதியில் இருந்து லெபனானின் உள்புறம் வரை விரிவுப்படுத்தியுள்ளது.
நஜ்ஜீரியா மற்றும் அடோசியா ஆகியவை இஸ்ரேலின் இலக்காக இருந்ததாகவும் இஸ்ரேல் எல்லையில் இருந்து இந்நகரங்கள் 30 கிமீ தொலைவில் உள்ளதாகவும் செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.
இறந்துபோனவர்களில் இருவர் சிரியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் லெபனானியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை நடந்த பரஸ்பர தாக்குதல்களில் லெபனானியர்கள் பலி எண்ணிக்கை 418 ஆக உள்ளது. இவர்களில் 80 பேர் பொதுமக்கள் என ஏஎஃப்பி தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதல்களில் 14 வீரர்கள் மற்றும் 10 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...