ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இலங்கையில் கனமழைக்கு 6 பேர் பலி, 11 பேர் காயம்

News image
கோப்புப் படம்.
Updated On :24 மே 2024, 2:27 pm

DIN

இலங்கையில் கனமழைக்கு மத்தியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் 6 பேர் பலியானதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மைய செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, இலங்கையில் கனமழை மற்றும் பலத்த காற்றின் போது மரங்கள் விழுந்ததில் ஆறு 6 பேர் பலியாகியுன்னர். அத்துடன் 11 பேர் காயமடைந்தனர். 15 மாவட்டங்களைச் சேர்ந்த 35,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

5 வீடுகள் இடிந்துள்ளதுடன், 1,246 வீடுகள் சேதமடைந்தன என்றார். மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ள பேரிடர் மேலாண்மை மையம், ஆறுகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, தென்மேற்கு பருவமழை காரணமாக, கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.

நாடு முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும், கடற்படை மற்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. மேலும் இலங்கையைச் சுற்றிலும், அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாப் பகுதிகளில், மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.