2015-க்குப் பிறகு உலகில் மரண தண்டனைகள் அதிகரிப்பு!

உலகளவில் அதிகமாக மரண தண்டனைகள் நிறைவேறும் நாடாக ஈரானும், அதற்கடுத்து சௌதி அரேபியாவும் உள்ளது.
2015-க்குப் பிறகு உலகில் மரண தண்டனைகள் அதிகரிப்பு!
Published on
Updated on
1 min read

பெர்லின்: உலகளவில் 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு மரண தண்டனைகள் அதிகரித்துள்ளதாக லண்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழுவான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

கடந்த 2023ல் 16 நாடுகளில் 1,153 பேர் தூக்கிலிடப்பட்டனர் என்று அம்னெஸ்டி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் 883 ஆக இருந்த இந்த எண்ணிக்கையானது தற்போது 31 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகளவில் கிட்டத்தட்ட முக்கால்வாசி மரண தண்டனைகள் ஈரானில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு நாட்டில் 2023ல் சுமார் 853 பேர் தூக்கிலிடப்பட்டனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 48 சதவீதம் அதிகமாகும்.

2015-க்குப் பிறகு உலகில் மரண தண்டனைகள் அதிகரிப்பு!
தங்கம் விலை நிலவரம்: வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்

இதற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் சௌதி அரேபியாவில் 172 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது உலக மொத்தத்தில் 15 சதவீதத்தைக் குறிக்கிறது. சோமாலியா மற்றும் அமெரிக்காவில் கடந்தாண்டு மரண தண்டனைகள் 38 மற்றும் 24 ஆக உயர்ந்துள்ளன.

பெலாரஸ், ஜப்பான், மியான்மர் மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகளில் மரணதண்டனையைப் பதிவு செய்யத் தவறியதையடுத்து, அங்கு மிகவும் குறைந்த அளவிலான எண்ணிக்கையே பதிவாகியுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் உலகளவில் வழங்கப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்து 2,428 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 144 நாடுகளில் மரண தண்டனை சட்டத்தை நடைமுறையிலிருந்து ரத்து செய்துள்ளன.

2015-க்குப் பிறகு உலகில் மரண தண்டனைகள் அதிகரிப்பு!
கேஜரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு கோரிய மனு நிராகரிப்பு

ஜெர்மனியில் உள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷ்னலின் பொதுச்செயலாளர் ஜூலியா டச்ரோ, மரண தண்டனையை நிறைவேற்றும் நாடுகளில் வீழ்ச்சியை வரவேற்றுள்ளார், ஆனால் மொத்த மரண தண்டனைகள் அதிகரித்துவருவது கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

மனித உயிருக்கு ஈரானிய அதிகாரிகள் காட்டும் மோசமான அலட்சியத்தைச் சுட்டிக்காட்டியதோடு, சௌதி அரேபியாவில் சமூக ஊடக குற்றங்களுக்கும் மரண தண்டனையை விதிப்பது குறித்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com