வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

காஸாவில் 3 இஸ்ரேலிய வீரர்கள் பலி! ஹமாஸின் தாக்குதல்?

ராஃபாவில் மூன்று இஸ்ரேல் வீரர்கள் பலி: காஸா மோதலில் தொடரும் உயிரிழப்புகள்

News image
இஸ்ரேல் வீரர்கள்- ஏபி
Updated On :29 மே 2024, 1:42 pm

DIN

காஸாவின் தெற்கு பகுதியான ராஃபாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில் ராஃபாவில் உள்ள கட்டடத்தில் அமைக்கப்பட்ட பொறி வெடித்ததில் மூன்று இஸ்ரேல் வீரர்கள் பலியானதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நஹால் காலாட்படையை சேர்ந்த மூவரும் உயிரிழந்ததை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் ஆயுதங்கள் உள்ளதா என ராணுவ வீரர்கள் களச்சோதனையில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் எங்கு நடந்தது, அவர்கள் எப்படி இறந்தனர் என்பது குறித்து ராணுவம் விளக்கமளிக்கவில்லை. உள்நாட்டு செய்தி நிறுவனங்களே பொறியில் சிக்கி அவர்கள் இறந்ததாக தெரிவித்துள்ளன.

செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த தாக்குதலில் பலியான வீரர்களுடன் சேர்த்து இதுவரை 639 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் 3,600 பேர் காயமுற்றுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

போர் தொடங்கி ஏழாவது மாதம் நிறைவு பெறவுள்ள நிலையில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 36,100 ஆக உள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.