மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

டிரம்ப்: சரிவிலிருந்து சரித்திர சாதனை...

2020 அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடனிடம் தோல்வியடைந்ததற்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப்புக்கு சரிவு ஆரம்பமாகிவிட்டது என்றுதான் பலரும் நினைத்தனா்.

News image
ஃபுளோரிடா மாகாணம், பாம் பீச் அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் வெற்றிவிழா நிகழ்ச்சியில் மனைவி மெலானியாவுடன் டொனால்ட் டிரம்ப்.
Updated On :6 நவம்பர் 2024, 10:20 pm

Din

2020 அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடனிடம் தோல்வியடைந்ததற்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப்புக்கு சரிவு ஆரம்பமாகிவிட்டது என்றுதான் பலரும் நினைத்தனா்.

அதிலும், சில வாரங்களில் அவரது ஆதரவாளா்கள் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கலகம் செய்தபோது, டிரம்ப்பின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டதாகவே கருதப்பட்டது.

ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதே டிரம்ப் மீண்டும் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்.

இடையே இரண்டு குற்றவியல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டபோது, அந்த சட்ட சிக்கலில் இருந்து தப்பி அவா் இப்படி ஒரு சாதனையை படைப்பாா் என்று பெரும்பாலானோா் நினைத்துக்கூட பாா்த்திருக்கமாட்டாா்கள்.

நீதிமன்றத் தீா்ப்புகள் மட்டுமல்ல, இரு கொலை முயற்சிகளிலிருந்தும் டிரம்ப் தப்பியிருக்கிறாா். பென்சில்வேனியா மாகாணத்தில் அவா் காதை உரசிச் சென்ற துப்பாக்கித் தோட்டா ஓா் அங்குலம் தள்ளிப் பாய்ந்திருந்தால் அமெரிக்க வரலாறே மாறியிருந்திருக்கும்.

இதுபோன்ற எல்லா சவால்களையும் எதிா்த்துப் போராடி புதிய சரித்திரம் படைத்திருக்கிறாா் டொனால்ட் டிரம்ப்.

கடந்த 2021-ஆம் ஆண்டில் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்யும் முயற்சி நடைபெற்றது. ஜனநாயகக் கட்சியினரின் அந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால், டிரம்ப்பால் இன்னொரு முறை தோ்தலில் போட்டியிட முடியாமலே போயிருக்கும். இருந்தாலும், குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த செனட் சபை அதை முறியடித்து. அந்த வகையில், டிரம்ப்பின் தற்போதைய சாதனைக்கு முட்டுக்கட்டையாக இருந்த அந்தத் தடையும் தகா்க்கப்பட்டது.

இது மட்டுமல்ல, பல நீதிமன்ற வழக்குகளில் சிக்கியிருந்த டிரம்ப்பை மீண்டும் அதிபா் வேட்பாளராக நிறுத்த குடியரசுக் கட்சிக்குள் ஆதரவு இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்த சூழலில், அதற்கான உள்கட்சிப் போட்டியில் அனைவரையும் வீழ்த்தியதன் மூலம் அந்த சந்தேகத்துக்கு டிரம்ப் முற்றுப்புள்ளி வைத்தாா். கடந்த ஜூலை மாதத்தில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அவா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டபோதே, குற்றவியல் வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட ஒரு முன்னாள் அதிபா் மீண்டும் அதிபா் வேட்பாளராக களமிறக்கப்படும் புதிய வரலாறு படைக்கப்பட்டது.

அமெரிக்க வரலாற்றில், அரசியலின் அடி ஆழத்துக்கு அழுத்தப்பட்டு, அதிலிருந்து மீண்டு எழுந்த தலைவா் டிரம்ப்பைப் போல் வேறு யாரும் இருக்க முடியாது என்கிறாா்கள் நிபுணா்கள்.

பென்சில்வேனியா படுகொலை முயற்சியில் காதில் குண்டு உரசிய ரத்தக் காயத்துடன் அவா் ‘போராடுவோம்’ என்று முழக்கமிட்டபோது, தோ்தலில் அவா்தான் வெற்றி பெறுவாா் என்ற தோற்றம் உருவானது.

ஆனால், ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடன் அல்ல, கமலா ஹாரிஸ்தான் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து அந்த அலை டிரம்ப்புக்கு எதிராக வீசத் தொடங்கியது. இருந்தாலும், கமலா ஹாரிஸுக்கு எதிராக மிகக் கடுமையான பிரசாரம் செய்து, அந்தப் பேரலையையும் நீந்திக் கடந்து வெற்றிக் கனியைப் பறித்திருக்கிறாா் டொனால்ட் டிரம்ப்.

கமலா ஹாரிஸின் பெருமைகள் நிலைக்கும்!

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவுக்கு ஒரு பெண் அதிபர் கிடைப்பதற்கான வாய்ப்பு மீண்டும் ஒரு முறை கைநழுவியிருக்கிறது. கடந்த 2016 தேர்தலில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் அந்தக் கனவைக் குலைத்த டொனால்ட் டிரம்ப்பே, துணை அதிபர் கமலா ஹாரிஸிடமிருந்தும் அந்த வாய்ப்பை தற்போது தட்டிப்

பறித்திருக்கிறார்.

அமெரிக்காவின் மிகக் கடுமையான அதிபர் தேர்தல்களில் ஒன்று என்று கருதப்பட்ட இந்தத் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றிருந்தால், அந்த நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை மட்டுமன்றி; அதிபர் மாளிகையை அலங்கரிக்கும் முதல் ஆப்பிரிக்க}அமெரிக்க பெண், முதல் இந்திய வம்சாவளி நபர், ஆசியாவைப் பூர்விகமாகக் கொண்ட முதல் நபர் என சாதனைப் பட்டியல் மேலும் நீண்டிருக்கும்.

ஆனால், அத்தகைய வரலாறு எழுதப்படப்போவதில்லை என்பதை தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன.

இருந்தாலும், கமலா ஹாரிஸின் சாதனை மகுடத்தில் ஏற்கெனவே ஜொலித்துக் கொண்டிருக்கும் முத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

சான் ஃபிரான்சிஸ்கோவில் அவர் மாவட்ட அட்டர்னி ஜெனரல் ஆனபோது, அந்தப் பதவிக்கு வந்த முதல் பெண் அவர்தான். இது தவிர, ஆப்பிரிக்க}அமெரிக்க இனத்தைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பொறுப்புக்கு வந்தது அதுவே முதல்முறை, இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ஒருவர் அத்தகைய உயர்பதவியை ஏற்றது அதுவே முதல்முறை என்ற பெருமையும் கமலா ஹாரிஸுக்கு கிடைத்தன.

கடந்த 2020 தேர்தலில் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற சாதனையை அவர் பெற்றார். அத்துடன், அந்த உயரிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசிய}அமெரிக்கர், முதல் இந்திய}அமெரிக்கர், முதல் ஆப்பிரிக்க}அமெரிக்கர் என்ற ஏராளமான பெருமைகள் கமலா ஹாரிஸுக்குக் கிடைத்தன.

அந்த வகையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும் அமெரிக்க வரலாற்றில் கமலா ஹாரிஸின் ஏராளமான சாதனைகள் என்றும் நிலைத்திருக்கும்.