டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சாட்: 96 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்

மத்திய ஆப்பிரிக்காவை சோ்ந்த சாட் நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது.

News image
Updated On :11 நவம்பர் 2024, 10:00 pm

DIN

நட்ஜமெனா (சாட்): மத்திய ஆப்பிரிக்காவை சோ்ந்த சாட் நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது.

லேக் சாட் பிராந்தியத்தில் ராணுவ வீரா்கள் மீது போகோ ஹராம் பயங்கரவாதிகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினா். இதில் ராணுவ வீரா்கள் 17 போ் கொல்லப்பட்டனா். இதற்குப் பதிலடியாக ராணுவம் நடத்திய தாக்குதலில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 போ் கொல்லப்பட்டதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

லேக் சாட் பிராந்தியத்தில் 2020-இல் ராணுவம் நடத்திய தாக்குதலில் போகோ ஹராம் பயங்கரவாத இயக்கத்தின் நிலைகள் அழிக்கப்பட்டன. இந்நிலையில், அண்மைக் காலமாக போகோ ஹராம் மற்றும் ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்கள் இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வருகின்றன.

இந்தப் பகுதியில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா். நைஜீரியாவின் தோன்றிய போகோ ஹராம் அமைப்பானது இஸ்லாமிய சட்டத்தை நிறுவும் நோக்குடன், தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் தாக்குதல்கள் மேற்கு ஆப்பிரிக்காவின் அண்டை நாடுகளான கேமரூன், நைஜா், சாட் போன்றவற்றுக்கும் விரிவடைந்தன.

சாட் நாட்டில் 1.8 கோடி மக்கள் வசித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.