கடற்கரையில் நடக்க முடியாமல் தடுமாறும் அதிபர் ஜோ பைடன்! விடியோ

மணற்பாங்கான கடற்கரையில் நடக்க முடியாமல் தடுமாறும் அதிபர் ஜோ பைடன் விடியோ வைரலாகியிருக்கிறது.
கடற்கரையில் நடக்க முடியாமல் தடுமாறும் அதிபர் ஜோ பைடன்! விடியோ
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது டெலாவர் வீட்டுக்கு அருகே மணற்பாங்கான கடற்கரையில் நடந்து செல்லும்போது, அவர் தடுமாறுவதும், அவருக்கு ஜில் பைடன் உதவும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது.

81 வயதாகும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மணலில் நடக்க முடியாமல் பல முறை தடுமாறுவதும், அவருக்கு மனைவி ஜில் பைடன் உதவி செய்து அழைத்துச் செல்வதும், சாண்டி கடற்கரையில் வார இறுதியை ஜோ பைடன் கழிக்கவந்திருந்தபோது நடந்த விடியோ காட்சி எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சமநிலையற்ற மணல் பாங்கான பகுதியில் ஜோ பைடன் நடக்க முடியாமல், ஒரு குழந்தை போல சிறு சிறு அடிகளாக எடுத்து வைத்து வேகமாக நடக்கிறார். சற்று தொலைவு செய்ததும் அவரது கையை ஜில் பைடன் பிடித்துக்கொள்கிறார். பிறகு அவர் தொடர்ந்து மணலில் நடந்து செல்கிறார்.

ஏற்கனவே, அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவர் தவறாக பெயர்களை உச்சரித்து விமர்சனங்களைப் பெற்றதால், அதிபர் தேர்தலிலிருந்தே விலக நேரிட்டது. இந்த நிலையில் அவர் கடற்கரையில் நடக்க முடியாமல் தடுமாறுவதை, குடியரசுக் கட்சியின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் ஜோ பைடனால் நடக்க முடியவில்லை என்ற விமர்சனங்கள் பதிவிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர், கமலா ஹாரிஸை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். கடந்த 1892ம் ஆண்டுக்குப் பிறகு, தொடர்ச்சியாக அல்லாமல் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக பதவிக்கு வரும் முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க புதிய அதிபராக 2025ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் வரை, அதிபராக ஜோ பைடன் பதவி வகிப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com