சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ரஷிய அதிபரை விமர்சித்த சமையல் கலைஞர் மர்ம மரணம்!

ரஷிய சமையல் கலைஞர் அலெக்ஸி ஜிமின் செர்பியா ஹோட்டலில் மர்ம மரணம்

அலெக்ஸி ஜிமின் (கோப்புப் படம்) - Instagram | Alexei Zimin

Published On :

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரை விமர்சித்த ரஷிய சமையல்காரர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2022 ஆம் ஆண்டிலிருந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு எதிராக, அதிபர் விளாதிமீர் புதினை ரஷிய சமையல் கலைஞர் அலெக்ஸி ஜிமின் விமர்சித்திருந்தார்.

இவர், ரஷிய தொலைக்காட்சி நிறுவனத்தில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வந்தார். ஆனால், ரஷிய அதிபரை விமர்சித்ததையடுத்து, அவர் தொகுத்து வழங்கிய சமையல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர் இங்கிலாந்தில் சமையல் கலைஞராக வேலைபார்த்து வந்தார். இங்கிலாந்துக்கு சென்றதிலிருந்து, அவர் ரஷியாவுக்கு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

உக்ரைனுக்கு நன்கொடை வழங்கியதால், அவருக்கும் அவர் வேலைபார்த்து வந்த உணவகத்துக்கும் அச்சுறுத்தல் வந்ததாகவும் உணவக உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், அவர் பிரிட்டன் ஆங்கிலோமேனியா என்ற புத்தகத்தை விளம்பரப்படுத்துவதற்காக செர்பியா சென்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, செர்பியாவில் ஒரு ஹோட்டலில் ஜிமின் தங்கியிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து, அவரது மரணத்தில் எவ்விதமான சந்தேகமும் இல்லை என்று தெரிவித்த காவல்துறையினர், உடற்கூறாய்வு அறிக்கை வெளியானவுடன்தான் தெரிய வரும் என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.