சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 10 பேர் பலி

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகினர்.

News image
ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து.
Updated On :15 நவம்பர் 2024, 10:17 am

DIN

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகினர்.

ஸ்பெயினின் சராகோசாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானார்கள்.

மேலும் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனிடையே தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தின் போது முதியோர் இல்லத்தில் 82 பேர் இருந்துள்ளனர்.

இந்த இல்லத்தில் முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் பராமரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.