
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் மீண்டும் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் படையினர், இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதலை நடத்தினர். மேலும், அங்குள்ளவர்களை பிணைக் கைதிகளாக பாலஸ்தீனத்துக்கு கொண்டு வந்தனர். அன்று ஆரம்பித்த இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் இன்றுடன் ஓராண்டாகிறது.
இதில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியதில் காஸாவின் பெரும்பாலான பகுதிகள் உருக்குலைந்துள்ளது. இந்த போர் தற்போது இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கு இடையேயான போராக நீடித்து வருகிறது.
காஸாவில் கடந்த அக். 7 ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரில் சுமார் 42,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா். சுமார் 97,000 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஹமாஸ் படையிடம் 100 இஸ்ரேலியர்கள் பிணைக் கைதிகளாக உள்ளனர்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு நவம்பா் மாதம் ஏற்பட்டட 7 நாள் போா் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகளும், ஹமாஸ் பிடியில் இருந்த 105 பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனா்.
ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தைகள் தொடா் தோல்வியைச் சந்தித்துவருகின்றன.
இதையும் படிக்க | இந்தியா கூட்டணிக்கு மெஹபூபா முஃப்தி ஆதரவா?
ஓராண்டையொட்டி காஸாவில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஹமாஸ் படையினர் இன்று மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் படையினர் ராணுவப் பிரிவு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
காஸா பகுதியில் இருந்து டெல் அவிவ் பகுதிக்கு ஏவுகணை மூலமாக வான்வழித் தாக்குதல் நடந்ததாகவும் இஸ்ரேல் விமானப்படை, காஸாவில் இருந்து வந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.