ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி உயிரிழப்பு!
பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தளபதி உயிரிழப்பு..


பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது .
ஹமாஸ் படையினரை ஒழிப்பதற்காக காஸாவில் இஸ்ரேல் கடந்தாண்டு அக்டோபர் 7ல் தாக்குதல் தொடங்கியது. நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் போர் முடிந்தபாடில்லை.
ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவளித்து வருகின்றனர்.
குறிப்பாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், பெய்ரூட்டில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுஹைல் ஹுசைனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட சுஹைல் ஹுசைனி ஹிஸ்புல்லா அமைப்பின் தளவாடங்கள், வரவு செலவுத் திட்டம் மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தவர்.
ஈரானிலிருந்து மேம்பட்ட ஆயுதங்களை வெவ்வேறு ஹிஸ்புல்லா பிரிவுகளுக்கு விநியோகிப்பதில் ஹுசைனி ஈடுபட்டதாகவும், மேலும் ராணுவக் குழுவில் உறுப்பினராக இருந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...