
பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோ பிரேசிலில் உள்ள கட்டுமான நிறுவனத்துடன் ஊழலில் ஈடுபட்டதாக 20 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் கட்டுமான நிறுவனத்தில் பல லட்சம் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் நெடுஞ்சாலை அமைக்க அனுமதித்ததற்கு ஓடேபெக்ட் என்னும் கட்டுமான நிறுவனத்தில் இருந்து 35 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்றதாக டோலிடோ மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளார்.
அலெஜான்ட்ரோ டோலிடோ 2001 முதல் 2006 வரை பெருவின் அதிபராக பதவி வகித்துள்ளார்.
இந்த வழக்கை அமெரிக்கா விசாரணை நடத்தியது. அதன்படி, மெக்சிகோ, குவாதமாலா, ஈகுவடார் ஆகிய நாடுகளிலும் அமெரிக்கா தனது விசாரணையைத் தொடங்கியது. மேலும், இந்த விசாரணையில் டோலிடோ உள்பட பெருவின் முன்னாள் அதிபர்கள் 4 பேர் மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனாலும், இந்த ஊழல் வழக்கை அலெஜான்ட்ரோ டோலிடோ மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.