டாகர் (செனகல்) : மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ‘சாட்’ நாட்டில் ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
சாட் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து அடையாளம் தெரியாத பயங்கரவாதக் கும்பல் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) இரவு நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, இன்று(அக்.28) காலை சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்த அந்நாட்டின் அதிபர் மஹமத் டெபி இட்னோ, தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றவர்களை அடையாளம் கண்டு பதிலடி தாக்குதல் நடத்த ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை ஜிஹாத் ஆயுதப்படையான பொக்கோ ஹாரம் நடத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.