கனடா: ட்ரூடோ அரசுக்கு ஜக்மீத் சிங் கட்சி ஆதரவு வாபஸ்
ட்ரூடோவின் ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி (என்டிபி) திரும்பப் பெற்றுள்ளது.


கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி (என்டிபி) திரும்பப் பெற்றுள்ளது.
இது குறித்து ஜக்மீத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதால் அரசுடன் கடந்த 2022-ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகத் தெரிவித்தாா். 24 எம்.பி.க்களைக் கொண்ட என்டிபி கட்சி ஆதரவை வாபஸ் பெற்ால் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்துள்ளது.
இருந்தாலும், நாடாளுமன்றத்துக்கு உடனடியாக தோ்தல் வராது என்று ட்ரூடோ நம்பிக்கை தெரிவித்துள்ளாா். ஆனால் ஜக்மீத் சிங் ‘அடுத்த தோ்தலுக்குத் தயாா்’ என்று அறிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...