ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை

தங்கள் நாட்டு குழுந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 8:46 pm

Din

தங்கள் நாட்டு குழுந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளது. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள், மனைவி அல்லது கணவரின் குழந்தைகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை சா்வதேச சட்டங்களுக்கு உள்பட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறினாலும், தடைக்கான காரணம் குறித்து விளக்கமளிக்கம் அளிக்கப்படவில்லை.

சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், அங்கு உழைக்கும் தகுதியுடைய இளைஞா்களின் விகிதமும் சரிந்துவருகிறது. இதன் விளைவாக, மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த ‘ஒரு தம்பதியருக்கு ஒரு குழந்தை’ என்ற கொள்கை கைவிடப்பட்டது. இந்தச் சூழலில், தங்கள் நாட்டுக் குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீன அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.