விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரிட்டன்: செப். 27-இல் ஆப்கன் தூதரகம் மூடல்

லண்டனிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் இந்த மாதம் 27-ஆம் தேதி மூடப்படுகிறது.

News image
Updated On :9 செப்டம்பர் 2024, 10:30 pm

பிரிட்டன் தலைநகா் லண்டனிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் இந்த மாதம் 27-ஆம் தேதி மூடப்படுகிறது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

லண்டனில் செயல்பட்டுவரும்ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் அதிகாரிகளை தலிபான் ஆட்சியாளா்கள் பணி நீக்கம் செய்துள்ளனா். எனவே, அந்தத் தூதரகம் மூடப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனுக்கான ஆப்கன் தூதா் ஸலாமி ரஸூல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், வரும் 27-ஆம் தேதிக்குப் பிறகு தூதரகம் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினா் வெளியேறியதைத் தொடா்ந்து அந்த நாட்டை தலிபான்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு மீண்டும் கைப்பற்றினா். எனினும், அவா்களின் அரசை பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

அந்த நாடுகளில் உள்ள ஆப்கன் தூதரகங்களில், தலிபான்களுக்கு முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே தொடா்ந்து செயல்பட்டுவருகின்றனா்.

இந்தச் சூழலில், முந்தைய அரசுடன் தொடா்புடைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கன் தூதரகங்களுடன் தொடா்பைத் துண்டிப்பதாக தலிபான் ஆட்சியாளா்கள் கடந்த ஜூலை மாதம் அறிவித்தனா்.

பிரிட்டன், ஜொ்மனி, பெல்ஜியம், ஸ்விட்சா்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், போலந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், கனடா, நாா்வே ஆகிய நாடுகளில் உள்ள ஆப்கன் தூதரகங்கள் விநியோகிக்கும் நுழைவு இசைவுகள் (விசா) இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று தலிபான்கள் கூறினா்.

அதன் தொடா்ச்சியாக, லண்டனில் உள்ள ஆப்கன்தூதரகம் மூடப்படுவதாக பிரிட்டன் அரசு தற்போது அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.