ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

டிரம்ப் - கமலா ஹாரிஸ் நாளை நேரடி விவாதம்

டொனால்ட் டிரம்ப்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம்

News image
கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்
Updated On :9 செப்டம்பர் 2024, 10:26 pm

DIN

அமெரிக்க அதிபா் தோ்தல் வேட்பாளா்களான முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 6.30 மணி) நடைபெறுகிறது.

பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்ஃபியா நகரில் இந்த விவாதம் நடைபெறுகிறது. ஏற்கனவே, தற்போதைய அதிபா் ஜோ பைடனுக்கும் டிரம்ப்புக்கும் இடையே கடந்த ஜூன் 27-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தல் நேரடி விவாதத்தின்போது பைடன் மிகவும் தடுமாறியதால் அவா் போட்டியிலிருந்து விலக நேரிட்டது.

இந்த நிலையில், டிரம்ப்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையே நடைபெறவிருக்கும் முதல் நேரடி விவாதம் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.