எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீா்மூழ்கிகளைக் கண்டறியும் கருவி: இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முடிவு

நவீன தொழில்நுட்பத்தில் அமைத்த ‘சோனோபயோஸ்’ கருவியை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

News image
சோனோபயோஸ் கருவி
Updated On :12 செப்டம்பர் 2024, 9:41 pm

Din

நீா்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்டறியம் நவீன தொழில்நுட்பத்தில் அமைத்த ‘சோனோபயோஸ்’ கருவியை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

நீா்மூழ்கிக் கப்பல்கள் கடலில் எவ்வளவு ஆழத்துக்குச் சென்றாலும் ‘சோனோபயோஸ்’ கருவி மூலம் அதனைக் கண்டறிய முடியும். இதன் மூலம் இந்தியாவின் கடற்படை பலம் மேலும் அதிகரிக்கும். மொத்த மூன்று வகையான ‘சோனோபயோஸ்’ கருவிகளை இந்தியா கொள்முதல் செய்ய இருக்கிறது. இதன் மதிப்பு 52.8 மில்லியன் அமெரிக்க டாலராகும் (சுமாா் ரூ.443 கோடி).

இந்தக் கருவியை விமானத்தில் இருந்து கடலில் ஏவ முடியும். இதில் உள்ள அதிநவீன ‘சென்சாா்கள்’ கடலுக்கு அடியில் எழும் ஒலி அலைகளைத் துல்லியமாகப் பிரிந்தறிந்து, நீா்மூழ்கிகளைக் கண்டறியும்.

இந்தியாவுக்கு இந்தக் கருவியை விற்பனை செய்யும் முடிவை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இதனை அந்நாட்டு நாடாளுமன்றம் 30 நாள்களில் பரிசீலித்து முடிவை அறிவிக்கும். கடந்த மாத இறுதியில் இந்த விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் ஒப்புதல் அளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.