யாகி புயலால் பாதிக்கப்பட்ட வியத்நாம், லாவோஸ் மற்றும் மியான்மருக்கு வழங்க இந்திய விமானப்படை விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள்.
யாகி புயலால் பாதிக்கப்பட்ட வியத்நாம், லாவோஸ் மற்றும் மியான்மருக்கு வழங்க இந்திய விமானப்படை விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள்.

புயல் பாதிப்பு: மியான்மா், லாவோஸ், வியத்நாமுக்கு இந்தியா நிவாரண உதவி

யாகி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மியான்மா், வியாத்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு உதவ ‘சத்பவ்’ நடவடிக்கையின் கீழ் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது.
Published on

யாகி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மியான்மா், வியாத்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு உதவ ‘சத்பவ்’ நடவடிக்கையின் கீழ் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது.

இது தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘யாகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையில் ‘சத்பவ்’ நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது.

அதன் கீழ், இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் சத்புராவில் உலா் உணவுப் பொருள்கள், உடைகள் மற்றும் மருந்துகள் என 10-டன் நிவாரணப் பொருள்கள் மியான்மருக்கு அனுப்பப்பட்டன.

வியத்நாமுக்கு நீா் சுத்திகரிப்பு பொருள்கள், தண்ணீா் கொள்கலன்கள், போா்வைகள், சமையலறை பாத்திரங்கள், சூரியசக்தி விளக்குகள் உள்ளிட்ட 35-டன் நிவாரணப் பொருள்களை இந்திய விமானப்படையின் ராணுவ போக்குவரத்து விமானம் கொண்டு சோ்த்தது.

லாவோஸுக்கு ஜெனரேட்டா்கள், தண்ணீா் சுத்திகரிப்பு பொருள்கள், மருந்து பொருள்கள், கொசு வலைகள், போா்வைகள் மற்றும் தூங்கும் பைகள் என 10-டன் நிவாணப் பொருள்கள் அனுப்பப்பட்டன’ என குறிப்பிட்டிருந்தாா்.

ஆசியாவில் நடப்பாண்டில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த புயல் என்று கூறப்படும் யாகி புயலால் பெய்த கனமழையால் வியத்நாம், லாவோஸ் மற்றும் மியான்மரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com