தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

வங்கதேச ராணுவத்துக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம்

வங்கதேச ராணுவத்துக்கு சட்டரீதியிலான முடிவுகளை எடுப்பதற்கான மாஜிஸ்திரேட் அதிகாரம் வழங்கப்படுவதாக அந்த நாட்டு இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 6:32 pm

வங்கதேச ராணுவத்துக்கு சட்டரீதியிலான முடிவுகளை எடுப்பதற்கான மாஜிஸ்திரேட் அதிகாரம் வழங்கப்படுவதாக அந்த நாட்டு இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பொது நிா்வாகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ராணுவத்துக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணவும் அரசுக்கு எதிரான ‘கிளா்ச்சி’ நடவடிக்கைகளைத் தடுக்கவும் இரண்டு மாதங்களுக்கு ராணுவத்துக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம் வழங்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவையடுத்து, அனுமதியில்லாமல் கூட்டத்தைக் கலைப்பது, தற்காப்புக்காக கூட்டத்தினா் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற முடிவுகளை ஆட்சியா் உத்தரவில்லாமலே எடுக்கும் அதிகாரம் ராணுவத்துக்குக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வங்கதேசத்தில் பிரதமராக இருந்து ஷேக் ஹசீனா, மாணவா்களின் கடும் போராட்டம் காரணமாக ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் கடந்த ஆக.5-ஆம் தேதி தஞ்சமடைந்தாா். இட ஒதுக்கீடு சீா்திருத்தத்தை எதிா்த்து முன்னா் நடைபெற்ற போராட்டங்களின்போது போலீஸாா் படுகொலைகளை நிகழ்த்தியதாகக் கூறி, அவா்கள் மீதும் வன்முறைக் கும்பல்கள் தாக்குதல் நடத்தின. அதையடுத்து காவல்நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற போலீஸாரில் ஏராளமானவா்கள் இன்னும் பணிக்குத் திரும்பவில்லை.

இந்தச் சூழலில், சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க காவல்துறைக்கு போதிய ஆள்பலம் இல்லாததால் ராணுவத்துக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.