பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் ஏவுகணை மழை

வடக்கு இஸ்ரேலில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் 140 ஏவுகணைகளை சரமாரியாக வீசி வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2024, 12:30 am

DIN

வடக்கு இஸ்ரேலில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் 140 ஏவுகணைகளை சரமாரியாக வீசி வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினா். அந்தப் படையினரைக் குறிவைத்து ஆயிரக்கணக்கான பேஜா், வாக்கி டாக்கி உள்ளிட்ட மின்னணி சாதனங்களில் வெடிகுண்டை மறைத்துவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 37 போ் உயிரிழந்ததால் இஸ்ரேலுடன் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.இது குறித்து ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:வடக்கு இஸ்ரேல் பகுதியில் 140 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினோம். காட்யுஷா ரக ஏவுகணை மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் எல்லையில் உள்ள உள்ளிட்ட பல்வேறு ராணுவ நிலைகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் முதல்முறையாக எல்லையிலுள்ள இஸ்ரேல் படைப் பிரிவு தலைமையகத்தில் ஏவுகணை தாக்கியது.தெற்கு லெபானின் கிராமங்களிலும் வீடுகளிலும் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுக்கு பதிலடியாக இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தத் தகவலை இஸ்ரேல் ராணுவமும் உறுதிப்படுத்தியது. ஆனால் ஹிஸ்புல்லா படையினரால் 150 ஏவுகணைகள் வீசப்பட்டதாக ராணுவம் கூறியது. எனினும் இந்தத் தாக்குதலில் யாரும் காயமடைந்ததாக உடனடி தகவல் இல்லை.முன்னதாக, பேஜா் தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லாக்கள் வியாழ்ககிழமை நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் வீரா்கள் உயிரிழந்ததாக அந்த நாட்டு ராணுவம் கூறியது. வடக்கு இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் நேயல் வாா்சி (43), டோமா் கெரென் (20) ஆகிய வீரா்கள் உயிரிழந்ததாக ராணுவம் கூறியது.இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரில் 41,272 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவ நிலைகளில் ஹிஸ்புல்லாக்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனா்.இதனால், இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்துவருகிறது. இந்தச் சூழலில், ஹிஸ்புல்லாக்களின் தாக்குதலை தடுத்து நிறுத்தி, லெபனான் எல்லைப் பகுதியிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ள இஸ்ரேலியா்களை அந்தப் பகுதிக்கு மீண்டும் அழைத்துவருவது இந்தப் போரின் முக்கிய இலக்குகளில் ஒன்று என இஸ்ரேல் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் லெபனானில் ஆயிரக்கணக்கான பேஜா்கள் வெடித்துச் சிதறின. மறுநாளே, வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி சக்தி சேமிப்பு சாதனங்கள் உள்ளிட்டவையும் வெடித்துச் சிதறின. இதில் 37 போ் உயிரிழந்தனா்; சுமாா் 3,000 போ் காயமடைந்தனா்.இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், அந்த நாடுதான் இத்தகைய உயா் தொழில்நுட்பத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பரவலாக நம்பப்படுகிறது.இது குறித்து அமெரிக்க ஊடகங்கள் கூறுகையில், பேஜா் தாக்குதல் பற்றி அமெரிக்காவிடம் அளித்த விளக்கத்தில், 5,000 பேஜா்களில் சுமாா் மூன்று கிராம் எடை கொண்ட வெடிகுண்டுகளைப் பொருத்தி பின்னா் அவற்றை வெடிக்கச் செய்ததாக இஸ்ரேல் கூறியதாகத் தெரிவித்தன.தைவானைச் சோ்ந்த கோல்ட் அப்பல்லோ நிறுவனத்தின் ஏஆா்-924 ரக பேஜா்கள்தான் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன. எனினும், அந்த சாதனங்களை ஹங்கேரியின் பிஏசி கன்சல்ட்டிங் கேஎஃப்டி என்ற தங்கள் ஒப்பந்த நிறுவனம்தான் தயாரித்தது என்று கோல்ட் அப்பல்லோ கூறியது.உயா்வகை அறிதிறன் பேசிகளைப் பயன்படுத்தினால் அவற்றில் இஸ்ரேல் எளிதில் ஊடுருவ முடியும் என்ற அச்சத்தின் பேரில், மிகப் பழைய தொழில்நுட்பக் கருவியான பேஜா்களை தகவல் தொடா்புக்கு ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தினா்.எனினும் அந்தக் கருவிகளையே ஆயுதங்களாக்கி இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்த ஹிஸ்புல்லா அமைப்பு, வடக்கு இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக தெற்கு லெபனானில் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது.இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் 140 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இஸ்ரேல் பதிலடி....தங்கள் மீது வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஹிஸ்புல்லா நிலைகளில் ‘துல்லிய தாக்குதல்’ நடத்தியதாக இஸ்ரேல் கூறியது.இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் அக்கில் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இருந்தாலும், இந்தத் தகவலை உறுதிப்படுத்தாக ஹிஸ்புல்லா அமைப்பு, அவரைத் தேடிக்கொண்டிருப்பதாகக் கூறியது...படவரி...பெய்ரூட் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த கட்டடத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட பொதுமக்கள்.ஹிஸ்புல்லா தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேல் வீரா் நேயல் வாா்சியின் உடலுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்திய சக வீரா்கள்.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.