ரஷிய ஆயுதங்களின் 60% பாகங்கள் சீனாவில் தயாரானவை: உக்ரைன்!

ரஷிய ஆயுதங்களில் காணப்படும் வெளிநாட்டு பாகங்களில் 60% சீனாவில் தயாரானவையே...
ரஷிய படைகள் மீது தாக்குதல் நடத்த தயாராகும் உக்ரைன் ராணுவ வீரர் (கோப்புப் படம்)
ரஷிய படைகள் மீது தாக்குதல் நடத்த தயாராகும் உக்ரைன் ராணுவ வீரர் (கோப்புப் படம்)EVGENIY MALOLETKA
Published on
Updated on
1 min read

ரஷிய ஆயுதங்களில் காணப்படும் வெளிநாட்டு பாகங்களில் 60% சீனாவில் தயாரனதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

ரஷியா உக்ரைன் நாடுகளிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம், ரஷியாவின் குர்ஸ்க் பகுதியில் பெரிய அளவிலான நிலப்பரப்பை உக்ரைன் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இரு நாடுகளுக்குமிடையேயான போர் தீவிரமடைந்துள்ளது.

இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில், உக்ரைனில் கண்டெடுக்கப்பட்ட ரஷியாவின் ஆயுதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு பாகங்களில் 60% சீனாவில் தயாரானதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் விளாடிஸ்லவ் விலசியுக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், “நீங்கள் தாக்குதலில் கிடைத்த வழக்கமான ஆயுதங்களில் காணப்படும் பாகங்களைக் கணக்கிட்டால் அதில் 60% சீனாவில் தயாரிக்கப்பட்டவை. இது தொடர்பாக நமது உற்பத்தியாளர்களுடன் நீண்ட விவாதங்களை நடத்தியுள்ளோம். சீனா இதில் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது" என்று கூறினார்.

கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், டிரோன்கள், ஏவுகணைகள் ஆகியவை முதற்கொண்டு அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து போன்ற மேற்கத்திய நாடுகளிலிருந்து தயாரித்து அனுப்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com