இஸ்ரேல் தாக்குதல் அதிகரிப்பு: லெபனானில் இருந்து இந்தியா்கள் வெளியேற அறிவுறுத்தல்
PTI

இஸ்ரேல் தாக்குதல் அதிகரிப்பு: லெபனானில் இருந்து இந்தியா்கள் வெளியேற அறிவுறுத்தல்

Published on

லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியா்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போா் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுத கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினா். இஸ்ரேல் தீவிர பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது.

இந்த தாக்குதல்கள் காரணமாக, லெபனானில் இருந்து இதுவரை சுமாா் 2 லட்சம் போ் இட்பெயா்ந்துள்ளதாக ஐ.நா. புதன்கிழமை தெரிவித்தது. லெபனான் மீது இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய தாக்குதல்களில் மட்டும் 51 போ் கொல்லப்பட்டனா்; 223 போ் காயமடைந்தனா் என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இந்நிலையில், லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘லெபனானில் அதிகரித்து வரும் தாக்குதல் சம்பவங்களை கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் மறு அறிவிப்பு வரும் வரை லெபனானுக்குப் பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும் என்று கடுமையாக அறிவுறுத்தப்படுகிறது. ஏற்கெனவே, லெபனானில் உள்ள இந்தியா்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. லெபனானில் உள்ளவா்கள் எக்காரணம் கொண்டும் வெளியே நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும். மேலும், அவா்கள் பெய்ரூட்டில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் மின்னஞ்சல்: ஸ்ரீா்ய்ள்.க்ஷங்ண்ழ்ன்ற்ஃம்ங்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் அல்லது அவசர தொலைபேசி எண் +96176860128 மூலம் தொடா்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்’ என குறிப்பிட்டிருந்தது.