கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஹாரிபாட்டர் புகழ் மேகி ஸ்மித் காலமானார்!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்து புகழ்பெற்ற மேகி ஸ்மித் தனது 89-வது வயதில் காலமானார்.

News image
Updated On :27 செப்டம்பர் 2024, 2:10 pm

DIN

ஹாரி பாட்டர் மற்றும் டவுன்டன் அபே ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற மேகி ஸ்மித் காலமானார். அவருக்கு வயது 89.

இதுகுறித்து அவரது மகன்கள் டோபி ஸ்டீபன்ஸ் மற்றும் கிறிஸ் லார்கின் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “மேகி ஸ்மித்தின் மரணமடைந்ததை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். செப்டம்பர் 27 (வெள்ளிக்கிழமை) அதிகாலை மருத்துவமனையில் அவர் காலமானார். அவர் உயிரிழக்கும் தருவாயில் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரின் நண்பர்கள் உடனிருந்தனர். அவர் இரண்டு மகன்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகளை விட்டுச்சென்றுள்ளார். பாட்டியின் இழப்பு பேரக்குழந்தைகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகி ஸ்மித், ஹாரி பாட்டர் திரைப்படத் தொடரில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்திலும், டவுன்டன் அபேயில் கூர்மையான நாக்கு கொண்ட டோவேஜர் கவுண்டஸ் கதாபாத்திரத்திலும் நடித்து புகழ்பெற்றார்.

மேகி ஸ்மித்தின் திரைப்பட வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. மேலும் அவர் மிகச்சிறந்த பிரிட்டிஷ் நடிகைகளில் ஒருவராகவும் கருதப்பட்டார்.

மேகி ஸ்மித் 1934 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர். இவர் மேடை நாடகங்களிலும் புகழ்பெற்றவர். இவர் 1963 ஆம் ஆண்டு வெளியான தி வி.ஐ.பி.எஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

காலமான மேகி ஸ்மித் தன் வாழ்நாளில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். அதில் 1970 ஆம் ஆண்டில் வெளியான தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடிக்காகவும்(The Prime of Miss Jean Brodie) மற்றொன்று 1979 ஆம் ஆண்டில் கலிபோர்னியா சூட்டிற்காகவுமாகும்(California Suite).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.