வைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

இந்தோனேசியா: சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு! 15 பேர் பலி!

கனமழையால் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு

News image

கோப்புப் படம்

Updated On :27 செப்டம்பர் 2024, 4:30 pm IST

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் பலியாகினர்.

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமையில் பெய்த கனமழையின் காரணமாக சோலோக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்தது.

மேலும், நிலச்சரிவின்போது அந்த சுரங்கத்தில் 25 பேர் வரையில் பணியில் இருந்துள்ளனர். அவர்களில் 15 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். பிற தொழிலாளர்களில் 3 பேர் காயமடைந்தும், இடிபாடுகளில் சிக்கிய 7 பேரை தேடியும் வருகின்றனர்.

சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள், இயந்திரங்கள் ஏதுமின்றி கைகளாலேயே தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சாலை இல்லாத காரணத்தினால் 8 மணிநேரம் ஏற வேண்டியுள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.