கேரளத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் காணாமல் போயுள்ளதாக முதல்வர் வி.டி. சதீசன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
கேரளத்தின் பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு, கோட்டயம், கோழிக்கோடு, கண்ணூா் ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை அதிகாலை தொடங்கிய பலத்த மழை நள்ளிரவு வரை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்கள், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகள், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சதீசன்,
மாநிலம் முழுவதும் நிலவும் சூழலை அரசு ஆய்வு செய்ததாகவும், பத்தனம்திட்டாவின் சில பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மீட்புப் பணிகளுக்காக கொல்லத்திலிருந்து 14 மீன்பிடிப் படகுகள் செங்கன்னூருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சூலூர் (தமிழ்நாடு) தளத்திலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் திருவனந்தபுரத்தை வந்தடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர்கள் மற்றும் தரைவழி மீட்புக் குழுக்கள் மூலம் விநியோகிப்பதற்காக உணவுப் பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.
திங்கள்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, கேரளம் முழுவதும் 316 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் 11,018 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டயத்தில் மூவர், பூஞ்சார் தொகுதியின் எராட்டுப்பேட்டா பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் புதுப்பள்ளியில் உள்ள நீர்நிலை ஒன்றில் தவறி விழுந்த ஒரு குழந்தை, இடுக்கியில் 2 உயிரிழப்புகளும்,
விழிஞ்சம், முதலப்பொழி ஆகிய இடங்களில் தலா ஒரு உயிரிழப்பும், கொல்லத்தில் 2, மலப்புரத்தில் 4 உயிரிழப்புகளும், கண்ணூரில் ஒருவரும், கோழிக்கோட்டில் ஒருவர் என மொத்தம் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
கனமழைக்கு 164.98 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 3,596 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட மதிப்பீடுகள் காட்டுவதாக அவர் கூறினார். இருப்பினும், இறுதி மதிப்பீடுகள் முடிந்ததும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முக்கிய அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். இத்தகைய வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் இறுதிச் சடங்கு செலவுகளுக்காகவும் அரசு ரூ. 10,000 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் நிவாரண முகாம்களில் தங்கியிருந்து திரும்பும் குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு ரூ. 10,000 உடனடி நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பேரிடர் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு, இயல்பு நிலை திரும்பும் வரை நபர் ஒருவருக்கு ரூ. 300 வீதம் (ஒரு ரேஷன் கார்டுக்கு அதிகபட்சம் இருவருக்கு மட்டும்) வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ. 8 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று சதீசன் கூறினார்.
நிலச்சரிவுகளில் வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்த குடும்பங்களுக்கான நிதியுதவியை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்துவதாகவும் அவர் அறிவித்தார். பயிர் சேதத்திற்கான இழப்பீடு உயர்த்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Chief Minister V D Satheesan on Monday said that the death toll in rain-related incidents across Kerala has risen to 15, while seven people remain missing, and the overall situation was under control as the state intensified rescue and relief operations amid continuing heavy rain.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாகிஸ்தானில் அமைதிப் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்: 17 ஆக உயர்ந்த பலி!

கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - புகைப்படங்கள்
அதிரடியாக உயர்ந்த அரிசி விலை! கிலோவுக்கு ரூ. 15 அதிகம்! - விநியோகப் பற்றாக்குறை காரணமா?

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6-ஆக உயா்வு: 9 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government




