900 ஆண்டுகள் பழமையான கோட்டை விற்பனைக்கு! விலை ரூ.100 கோடி!

2013ஆம் ஆண்டுமுதல் கோட்டையின் சில பகுதிகள் உணவகமாகவும், விடுதியாகவும் மாற்றி உரிமையாளர் பராமரித்து வருகிறார்.
900 ஆண்டுகள் பழமையான கோட்டை விற்பனைக்கு! விலை ரூ.100 கோடி!
Updated on
1 min read

லண்டனில் 900 ஆண்டுகள் பழமையான கோட்டையை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப விலையாக ரூ.100 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் கம்பிரியா நகரில் 900 ஆண்டுகள் பழமையான கோட்டை அமைந்துள்ளது. இந்தக் கோட்டையை கடந்த 1997ஆம் ஆண்டு சாலி நைட்டிங்கேள் என்பவர் வாங்கியுள்ளார். 

சராசரியாக 29000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்தக் கோட்டையில், உரிமையாளர் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 7,750 சதுர அடியை மட்டுமே பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

கோட்டையின் எஞ்சிய பகுதிகளை 2013ஆம் ஆண்டுமுதல் உணவகமாகவும், விடுதியாகவும் மாற்றி பராமரித்து வருகிறார். 20 படுக்கை அறைகள் கொண்ட இந்த கோட்டையை தற்போது விற்பனை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஆரம்ப விலையாக ரூ.100 கோடி நிர்ணயித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 

பாரம்பரியமிக்க இந்தக் கோட்டை பல தொழிலதிபர்களின் விருப்ப இடமாகவும் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com