காஸாவின் அனைத்து பகுதிகளிலும் ராணுவ சோதனைகளை மேற்கொண்டு தினமும் 100-க்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொலை செய்துவருகிறது. நான்கு வயது குழந்தை மீது இஸ்ரேலின் ராணுவ நாய் ஏவப்பட்டதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகப்பு அமைப்பின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்.4-ல் ஹஷாஷ் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் ராணுவ நாயை இஸ்ரேல் அவிழ்த்துவிட்டுள்ளது. அந்தக் கட்டிடத்தில் இருந்த நான்கு வயது சிறுவன் இப்ராஹிம் ஹஷாஷ்-ஐ ராணுவ நாய் கடித்துக்குதற ஆரம்பித்துள்ளது. சிறுவனுக்கு ரத்தம் ஊற்றுமளவுக்கு நாய் தொடர்ந்து கடித்துள்ளது.
மூன்று நிமிடங்களுக்கு இந்தத் தாக்குதல் தொடர்ந்ததாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் இஸ்ரேல் ராணுவத்தினர் நாயைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுவன் நப்ளஸில் உள்ள ரஃபிடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறான்.
இதையும் படிக்க: 27,708-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு
இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனக் குழந்தைகளைப் பாதுகாப்பதில் அலட்சியம் செய்துவருவதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் திட்ட இயக்குநர் அயெட் அபு இக்டாய்ஷ் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலின் ராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளான பகுதிகளில் குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் இப்ராஹிமுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இஸ்ரேல் ராணுவம் தனது நாய்கள் மூலம் பொதுமக்களையும், குழந்தைகளையும் தொடந்து தாக்கிவருகிறது என அந்த அமைப்பு தெரிவிக்கிறது. இதுகுறித்த காணொலியை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மத்திய கிழக்கில் போர் எதிரொலி: கரடியின் தொடர் பிடியில் சென்செக்ஸ், நிஃப்டி!

இந்தோனேசியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் டெக்ஸ்லா படத்தின் பூஜை தொடக்கம்!

மகிந்திரா பிஇ 7: புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி 2027ல் அறிமுகம்!
வீடியோக்கள்
USA vs Iran போர் – இந்தியாவில் விலைவாசி உயருமா?
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு 2030! முதல்வர் வெளியிட்ட 14 அறிவிப்புகள்! | DMK | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சி விழா! | Temple | ஆன்மிகம்
தினமணி வீடியோ செய்தி...

எங்களை வைத்துதான் காங்கிரஸ் கூடுதல் சீட் பெற்றார்கள்!: செங்கோட்டையன் | TVK | Vijay
தினமணி வீடியோ செய்தி...

