இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையேயான போரின் முடிவு தொடர்பான எந்த தகவலும் கண்ணில் படாத நிலையில் மிகப்பெரும் இழப்பை காஸாவும் பாலஸ்தீன மக்களும் சந்தித்துவருகின்றனர்.
தங்களது உடைமைகள், உரிமைகள் என அனைத்தையும் இழந்து சொந்த நாட்டில் பல கொடுமைகளுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுவருகிறார்கள். அடிப்படை தேவைகளுக்கு கூட அல்லல்பட வைத்திருக்கும் இந்தப் போரின் 88 ஆவது நாளில் நடந்தவை இவை,
இஸ்ரேலில் வான்வழித்தாக்குதலால் டெய்ர் எல்-பலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்குக்கரையில் இஸ்ரேல் தொடர்ந்துவரும் சோதனையில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ஜப்பானில் பயணிகள் விமானம் விபத்து: தீப்பிடித்து எரிந்தது!
இஸ்ரேல் சிறையில் மேலுமொரு பாலஸ்தீனக் கைதி உயிரிழந்துள்ளார். இது திட்டமிட்ட கொலை என பாலஸ்தீன அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. போர் துவங்கியதிலிருந்து இதுவரை 7 கைதிகள் இஸ்ரேல் சிறையில் இறந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை 207 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளதாகவும் 338 பேரை காயப்பட்டிருப்பதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 21,978 பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளதாக காஸாவின் சுகாதர அமைச்சகம் கூறுகிறது. அக்டோபர் 7-ல் இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், 4,156 மாணவர்கள் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டதாகவும், 381 பள்ளிகளை இஸ்ரேல் அழித்துள்ளதாகவும் பாலஸ்தீன கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெட்ரோல் நிலையத்தில் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு பணப் பையை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்!

மேகாலயா: வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தளர்வு!

ராகுலுடன் சேர்ந்து மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சீரழிந்துவிட்டனர்! மத்திய அமைச்சர் காட்டம்!

ஊர்ந்து சென்று பதவியைப் பெற்றும் நன்றியில்லை; அவர் பெயரைச் சொல்லக்கூட விருப்பமில்லை! ஓபிஎஸ்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

