மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிகிச்சைக்காக வரிசையில் நிற்கும் காயம்பட்ட மக்கள்!

இஸ்ரேலின் தாக்குதலால் காயம்பட்ட காஸாவின் மக்கள், நடமாடும் மருந்தகங்களில் வரிசையில் நின்று சிகிச்சை பெறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :13 ஜனவரி 2024, 11:10 am

இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு இடையே சிக்கியிருக்கும் பாலஸ்தீன மக்கள் படும் கொடுமைகள் உலகம் அறியாதவை அல்ல. சர்வதேச நாடுகள் போரை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்திவரும் நிலையில், காஸா மக்களின் வலியை நிறுத்த எந்த வழியும் பிறக்கவில்லை.

இஸ்ரேலின் வான் மற்றும் தரைவழித் தாக்குதலுக்கு பல்லாயிரக்கணக்கில் மக்கள் பலியாகின்றனர். காயம்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் இடமின்றி  நிறைந்து வழிகின்றன.

சிகிச்சை கொடுக்க மிகக்குறைவான மருத்துவர்களைக் கொண்டுள்ள அவலம் காஸா மருத்துவமனைகளில் அரங்கேறியுள்ளது. 

பிஆர்சிஎஸ் - ன் (PRCS) நடமாடும் மருத்துவ முகாம்களில் காயங்களோடு வரிசையில் காத்திருக்கின்றனர் காஸா மக்கள். கான் யூனிஸிற்கு அருகேயும், ரஃபா பகுதியிலும் உள்ள நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் இம்மக்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்திருப்பதால், மருத்துவமனைகளுக்கு மின்விநியோகம் தடைபடும் அபாயம் உள்ளதாக தெரிகிறது. இதனால் அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பெரும் அபாயத்தை அடைந்துள்ளனர்.   

காஸாவில் 60,317 - க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 23,843 பேர் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 135 பேரை இஸ்ரேல் கொலை செய்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.