தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஹமாஸ் நடத்திய பயங்கர தாக்குதல்!

ஹமாஸ் அமைப்பினர் நடத்திய பயங்கர தாக்குதலில் 20க்கும் அதிகமான இஸ்ரேல் ராணுவத்தினர் பலியாகியுள்ளனர். 

News image
கோப்புப்படம்.
Updated On :23 ஜனவரி 2024, 7:45 am

DIN

இஸ்ரேலின் இரக்கமற்ற தொடர் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துவரும் நிலையில், ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரமான தாக்குதலை நடத்தியுள்ளது. 

போர் துவங்கியதிலிருந்து ஹமாஸ் அமைப்பினரின் பயங்கரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. 'மத்திய காஸாவில் நடந்த இந்த தாக்குதலில் 20க்கும் அதிகமான வீரர்களை நாங்கள் இழந்திருக்கிறோம்' என இஸ்ரேல் ராணுவத்தின் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் பீரங்கியின் மீது ஒரு ஆர்பிஜி ரக ஏவுகணை பாய்ந்தது. அதே நேரத்தில் அருகிலிருந்த இரண்டு கட்டிடங்கள் மற்றொரு குண்டுவெடிப்பால் சரிந்து விழத்துவங்கியுள்ளன. இதனால் கட்டிடத்திற்கு உள்ளும் அருகிலும் இருந்த வீரர்கள் பலியாகியுள்ளனர். 

அந்த இரண்டு கட்டிடங்களையும் தகர்ப்பதற்காக இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்ணிவெடிகளையும், வெடிபொருள்களையும் தயார் செய்துகொண்டிருக்கும்போது,  ஹமாஸ் நடத்திய தாக்குதல்களால் அவையும் வெடித்துள்ளன. இதனால் பெரும் இழப்பை இஸ்ரேல் ராணுவம் சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் இதுவரை 25,295 பேர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.