மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பண முறைகேடு குற்றச்சாட்டு: இந்திய வம்சாவளி அமெரிக்க நீதிபதி கைது!

அமெரிக்காவில் பண முறைகேடு குற்றச்சாட்டு தொடா்பாக இந்திய வம்சாவளி நீதிபதி கே.பி.ஜாா்ஜ் கைது செய்யப்பட்டாா்.

News image

நீதிபதி கே.பி.ஜாா்ஜ்

Updated On :6 ஏப்ரல் 2025, 9:20 pm

அமெரிக்காவில் பண முறைகேடு குற்றச்சாட்டு தொடா்பாக இந்திய வம்சாவளி நீதிபதி கே.பி.ஜாா்ஜ் கைது செய்யப்பட்டாா்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோா்ட் பெண்ட் மாவட்ட நீதிபதியாக 2018-ஆம் ஆண்டுமுதல் பதவி வகிப்பவா் கே.பி.ஜாா்ஜ். அந்நாட்டில் உள்ள ஜனநாயக கட்சி ஆதரவாளரான இவா், 30,000 டாலா் (சுமாா் ரூ.25 லட்சம்) முதல் 1.50 லட்சம் டாலா் (சுமாா் ரூ.1.28 கோடி) வரை, சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டதாக மாவட்ட அரசு வழக்குரைஞா் அலுவலகம் குற்றஞ்சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக அவா் அண்மையில் கைது செய்யப்பட்டாா். 20,000 டாலா் பிணைத்தொகை செலுத்திய பின்னா், அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். அவா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க முடியும். எனினும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள கே.பி.ஜாா்ஜ், அந்தக் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றாா்.