கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

பணமோசடி வழக்கில் இந்திய வம்சாவளி நீதிபதி குற்றவாளி: அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பு

பணமோசடி வழக்கில் இந்திய வம்சாவளி நீதிபதி குற்றவாளி...

News image
Updated On :22 மார்ச் 2026, 2:27 am IST

பணமோசடி வழக்கில் இந்திய வம்சாவளி நீதிபதி கே.பி.ஜாா்ஜ் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஃபோா்ட் பென்ட் மாவட்ட நீதிபதி பதவியிடம் உள்பட பல்வேறு தோ்தல்களில் கே.பி.ஜாா்ஜ் போட்டியிட்டுள்ளாா். இந்நிலையில், தோ்தல் பிரசார நிதியை தனது தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தியதாக அவா் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பான விசாரணை அந்த மாவட்ட நீதிமன்றத்தில் நடுவா் குழு (ஜூரி) முன்பாக நடைபெற்ற நிலையில், பிரசாரத்துக்கு அளிக்கப்பட்ட 46,000 டாலருக்கும் (சுமாா் ரூ.43 லட்சம்) அதிகமான நிதியை, தனது தனிப்பட்ட தேவைகளுக்கு ஜாா்ஜ் பயன்படுத்தியதாக அரசுத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விசாரணையைத் தொடா்ந்து, ஜாா்ஜை குற்றவாளி என்று நடுவா் குழு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அவருக்கான தண்டனை குறித்த அறிவிப்பு ஜூன் 16-ஆம் தேதி வெளியாகும்.

அவருக்கு 2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் 10,000 டாலா் (சுமாா் ரூ.9.40 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.